ஒரு வருடத்திற்கு மேல் ஆனது... ஆர்யா- சாயிஷா மகள் புகைப்படம் இப்போதான் வெளியானது

சென்னை: கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கும் மேலாக தங்கள் மகளை வெளியுலகிற்கு காட்டாமல் இருந்த ஆர்யா - சாயிஷா ஜோடி தற்போது முதல் முறையாக தங்கள் மகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

நடிகர் ஆர்யா - நடிகை சாயிஷா இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தங்களுடைய மகளுக்கு Ariana என பெயர் சூட்டியுள்ளனர்.

கிட்டத்தட்ட ஓராண்டுங்களுக்கும் மேல் ஆன நிலையிலும் இதுவரை தங்களுடைய மகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துவைக்காமல் இருந்து வந்தார்கள்.


இந்நிலையில், தற்போது தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து தங்களுடைய மகளை அறிமுகம் செய்கிறோம் என்று கூறியுள்ளார் சாயிஷா.