ஊரடங்கு காலத்தில் 11 கதைகள் ரெடி செய்துள்ளேன்; மிஷ்கின் சொல்கிறார்

ஊரடங்கு காலத்தில் 11 கதைகள் தயார் செய்துள்ளதாக இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் மிஷ்கின். துப்பறிவாளன்-2 படத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்த நேரத்தில் 11 கதைகளை தயார் செய்துள்ளதாக இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இந்த ஊரடங்கில் நான் புத்தகம் படிக்க அதிக நேரம் செலவிடுகிறேன். இதுதவிர பியானோ வாசிக்க கற்றுக்கொள்கிறேன். இந்த 2 மாத ஊரடங்கில் 11 கதைகளை தயார் செய்து வைத்துள்ளேன். சமீபத்தில் சிம்புவை சந்தித்து கதை கூறினேன். கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு சிம்பு எனது படத்தில் நடிப்பார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.