நடிகர் விஜய்க்கு தொலைபேசியில் வாழ்த்துச் சொன்ன கமல்

சென்னை: கமல் வாழ்த்து... நடிகர் விஜய்யை தொலைபேசி வாயிலாக அழைத்து நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

நடிகர் விஜய் 48வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவர் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பார்வை போஸ்டர்கள் வெளியானது. முதல் போஸ்டர் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை. இரண்டாவது போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மூன்றாவது போஸ்டர் செம வரவேற்பை பெற்றுள்ளது.

பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் விஜய்க்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தொலைபேசி வாயிலாக நடிகர் விஜய்யை தொடர்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அந்தப் படத்தின் பணிகள் தொடங்கப்படவில்லை. விக்ரம் வெற்றிவிழாவில் பேசிய கமல், லோகேஷின் அடுத்தப் படத்துக்கு (தளபதி 67) உதவ தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது விஜய்யை கமல் தொடர்பு கொண்டு வாழ்த்திய செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.