பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் முன்னணி நடிகை பங்கேற்க இருப்பதாக தகவல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீஸனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் முன்னணி நடிகை லட்சுமி மேனன் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த 'பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலேயே லட்சுமிமேனன் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் ஒருசில காரணங்களால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. தற்போது கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு அவர் சினிமா வாய்ப்புகள் தேடி கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமிமேனன் கலந்து கொண்டால் மீண்டும் தமிழ் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆகி ஒரு சுற்று வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமிமேனன் கலந்துகொள்ள இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவரது பெயரில் ஆர்மி தொடங்க ரசிகர்கள் தயாராகி வருகின்றன.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் ஏற்கனவே ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், சூர்யா தேவி, எலிசபெத் ஹெலன், புகழ், ரியோ ராஜ் உள்பட ஒருசிலர் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.