பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ‘லியோ`


லியோ படத்திற்கு விமர்சனங்கள் கலவையாக வந்தாலும் கூட படத்தின் வசூல் பல சாதனைகளை படைத்தது கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் முதல் நாளில் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும், கேரளாவில் அதிகம் வசூல் செய்த சாதனை என பல சாதனைகளை படைத்தது.

இதையடுத்து இன்னும் சாதனைகளை புடைத்துக்கொண்டு இரண்டாவது வாரமாக வசூலை குவித்து வருகிறது.இந்நிலையில், லியோ திரைப்படம் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில்,

படம் எத்தனை கோடி இதுவரை வசூல் செய்து உள்ளது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே அதன்படி, லியோ படம் வெளியான 12 நாட்களில் உலகம் முழுவதும் 540 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லியோ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் படத்தின் வெற்றிவிழாவை படக்குழு கொண்டாட திட்டமிட்டு உள்ளது.