ஒரே நாள் முன்பே வெளியாகும் ‘லியோ’

லியோ” திரைப்படம் வரும் 18-ம் தேதி பிரீமியர் ஷோவாக வெளியாகிறதாம் .... லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து உள்ள லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. எனவே இதனை முன்னிட்டு படத்தின் டிரைலரும் கடந்த 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமானது என்றே கூறலாம். அந்த அளவிற்கு படத்தின் டிரைலர் அதிரடி ஆக்சன் காட்சிகளால் நிறைந்து அனைவரையையும் புல்லரிக்க வைத்திருந்தது. இதனையடுத்து படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாவதாக தான் அறிவிக்கப்பட்டு இருந்தது.


ஆனால், அதற்கு முன்னதாக 1 நாட்களுக்கு முன்பே வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. எப்படி என்றால் லியோ திரைப்படத்திற்கு லியோ” திரைப்படம் வரும் 18-ம் தேதி பிரீமியர் ஷோவாக வெளியாகிறதாம். பிரீமியர் ஷோ என்றாலே பிரபலங்கள் மட்டும் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் தான் போட்டு காட்ட படும். அதைபோன்று சில குறிப்பிட்ட திரையரங்குகளில் தான் போடப்படும்.

ஆனால், லியோ திரைப்படத்தின் பிரீமியர் ஷோ 1,000 திரையரங்குகளில் வரும் 18-ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் என்று வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. “லியோ” சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன்தினமே பிரீமியர் ஷோவாக வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது .