இராவண கோட்டம் படக்குழுவினருக்கு லோகேஷ் கனகராஜ் வாழ்த்து

சென்னை: ‘இராவண கோட்டம்’ படத்தின் டைட்டில் பாடல் வரிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “இராவண கோட்டம்”. சாந்தனு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ராவண கோட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில், ‘இராவண கோட்டம்’ படத்தின் டைட்டில் பாடல் வரிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் மே 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.