லவ் உண்மையா... சொல்லுங்க சித்தார்த், சொல்லுங்க!!!

சென்னை: நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் அவர்கள் காதலிப்பது உண்மைதானா என கேட்டு வருகிறார்கள்.

நடிகர் சித்தார்த் இதற்கு முன்பு பல நடிகைகள் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார். அவர் தற்போது காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவ் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அதை உறுதி செய்யும் விதமாக அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது. அதிதி ராவுக்கு 36வது பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொன்ன சித்தார்த் Princess of Heart என குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் அவர்கள் காதலிப்பது உண்மைதானா என கேட்டு வருகிறார்கள்.