தெலுங்கிலும் வசூலை அள்ள தயாராகிறது லவ் டுடே

சென்னை: யாருமே எதிர்பார்க்காத வகையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் லவ்டுடே வசூலில் பட்டையை கிளப்பியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று பெரிய நடிகர்களின் படம் அளவிற்கு வசூல் வேட்டை நடத்தியது.

இந்நிலையில் தெலுங்கிலும் பட்டைய கிளப்ப ரெடியாகிறது ‘லவ் டுடே’ என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் கடந்த நவம்பர் 4ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டிரெய்லரை பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா நாளை மதியம் 12.10 மணிக்கு வெளியிட இருக்கிறார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இப்படம் தெலுங்கில் வரும் நவம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது.