இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது மணிகண்டன்

சென்னை: பிக்பாஸ் என ஆரம்பித்த முதல் சீசனிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி இப்போது 6வது சீசன் வரை வந்துள்ளது. இந்த சீசனில் மக்களுக்கு நன்கு பரீட்சயமான முகங்கள் உள்ளனர். சிலர் புதியவர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள்.

இதுவரை வீட்டில் இருந்து ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி என 6 பேர் வெளியேறிவிட்டார்கள். இதில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜி.பி.முத்துவிற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற நாமினேட் ஆனவர்கள் அசீம், ராபர்ட், மணிகண்டன், கதிரவன், தனலட்சுமி, அமுதவாணன், ராம் ஆகியோர். இதில் குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் இருப்பது மணிகண்டன் மற்றும் ராபர்ட் தானாம்.

இவர்களில் மணிகண்டன் மிகவும் குறைவான வாக்குகள் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் இந்தவாரம் மணிகண்டன் வீட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.