மாஸ்டர் படக்குழுவின் செம மாஸ் திட்டம்; விடுமுறை நாளில் வசூலை அள்ள முடிவு

விடுமுறை நாட்களை குறி வைத்துள்ள மாஸ்டர்... பிகில் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இயக்குநர் லோகேஜ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமான இந்த படத்தில் வெளியீடு தள்ளிபோயுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படம் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இதனை திட்டவட்டமாக மறுத்த படக்குழு மாஸ்டர் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என விளக்கம் அளித்தனர். இந்நிலையில், மாஸ்டர் படத்தை வருகிற பொங்கல் பண்டிகையாக ஜனவரி 14ம் தேதி வியாழக்கிழமைக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜனவரி 13ம் தேதி (புதன்கிழமை) வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

பிகில் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இயக்குநர் லோகேஜ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமான இந்த படத்தில் வெளியீடு தள்ளிபோயுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படம் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இதனை திட்டவட்டமாக மறுத்த படக்குழு மாஸ்டர் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என விளக்கம் அளித்தனர். இந்நிலையில், மாஸ்டர் படத்தை வருகிற பொங்கல் பண்டிகையாக ஜனவரி 14ம் தேதி வியாழக்கிழமைக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜனவரி 13ம் தேதி (புதன்கிழமை) வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது புதன்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால் வசூலை அள்ளிவிடலாம் என்பதுதான் மாஸ்டர் படக்குழுவின் மாஸ்டர் திட்டம் என்கின்றனர் கோலிவுட்டில்.