மாஸ்டர் படம் ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் என இணையத்தில் பரவும் தகவல்

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன், ஸ்ரீநாத், பிரேம், வர்ஷா பொல்லம்மா, தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் உரிமையை பிரபல OTT நிறுவனமான நெட்பிளிக்ஸ் இணையதளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை என வதந்திகள் பரவ தொடங்கியது.

இப்படியான நிலையில் மாஸ்டர் திரைப்படம் கட்டாயம் திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆகும். அதன் பின்னரே OTT தளத்தில் வெளியாகும் என படக்குழு விளக்கம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படம் பொங்கல் விருந்தாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் வெளியானதன் காரணமாக விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படக்குழுவினர் இதுகுறித்து தெரிவிக்காத நிலையில் பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.