மாஸ்டர் படத்தின் பாடல்களுக்கு சூப்பராக நடனமாடி இணையத்தை கலக்கும் நடிகைகள்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் ஆகிய பாடல்களுக்கு பல பிரபலங்கள் நடனமாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மேலும் இரண்டு நடிகைகள் மாஸ்டர் பட பாடல்களுக்கு நடனமாடியுள்ளனர்.

ராகவா லாரன்சின் ‘காஞ்சனா’ திரைப்படத்தில் நடித்த நடிகை வேதிகா தளபதியின் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘குட்டி ஸ்டோரி’ பாடலுக்கு மிகவும் அழகாக தளபதி விஜய் போலவே நடித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதேபோல் அஜித் நடித்த வில்லன், விக்ரம் நடித்த ஜெமினி, கமலஹாசன் நடித்த அன்பே சிவம் உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை கிரண் ரத்தோட், ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அவரது ஸ்டைலில் ஹாட்டாக நடனமாடி அதுகுறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவும் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.