தமிழில் மட்டுமில்லை ஹிந்தி டப்பிலும் செம டப் காட்டிய மாஸ்டர்

சென்னை: ஹிந்தியில் டப் செய்து யூடியூபில் வெளியிடப்பட்ட மாஸ்டர் திரைப்படம் செம சாதனை செய்து வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் விஜய் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

தற்போது விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் விஜய் நடித்து பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்ற படம் மாஸ்டர். இது பாக்ஸ் ஆபிஸில் ரூ. 250 கோடியளவில் வசூலித்தாக சொல்லப்பட்டது. தற்போது மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப்-ல் வெளியிடப்பட்டு இருக்கிறது.


வெளியான இரண்டே நாட்களில் மாஸ்டர் திரைப்படம் 5+ மில்லியன் வியூஸ் உடன் 107K லைக்ஸ்களை குவித்திருக்கிறது.