அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் ... ரஜினிகாந்த்

சென்னை : ரஜினிகாந்த் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பு .... சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு திரை பிரபலங்களும் , அரசியல் பிரமுகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். என அவர் பதிவிட்டுள்ளார்.