சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய நயன்தாரா..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.தென்னிந்திய சினிமாவில் கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக நயன்தாரா வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நயன்தாரா நடிக்கும் பெரும்பாலான படங்கள் ஹிட்டாகுவதால் அவரை தங்களது படங்களில் புக் செய்வதற்கு தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மாஸ் நடிகர்களுக்கு சரியான ஜோடியாக நயன்தாரா இருந்து வருகிறார்.

6 ஆண்டுகள் காதலுக்கு பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் திருமணம் முடித்தார் நயன்தாரா.பாலிவுட்டில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

ஜவான் படத்திற்காக ரூ. 7கோடி வரை நயன்தாரா சம்பளமாக பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.கதாநாயகியை மையப்படுத்தி தமிழில் உருவாகவுள்ள படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் நயன்தாராவுக்கு பேசப்பட்டதாகவும், இதனை அளிப்பதற்கு தயாரிப்பாளர் தரப்பில் சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.திருமணம் முடித்தாலும் தொடர்ந்து தனக்கேற்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.