தனுஷ் படத்தில் நடிக்க வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை?

சென்னை: நடிகர் தனுஷின் நடிக்க உள்ள படத்தை அவரது வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

தனுஷ் படத்தை அவரது நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கவிருப்பதாகவும், இதனை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவிருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகிவிட்டன.

ஆனால் தற்போது, இந்த படத்தில் தனுஷுடன் வடிவேலுவும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியாகியிருப்பதுதான் புதிய செய்தி வெளியாகி உள்ளது. ஒருவேளை இந்த பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால், முதல் முறையாக, தனுஷ் படத்தில் வடிவேலு இணைவது உறுதியாகும் என்றும், இது இரண்டு தரப்பு ரசிகர்களுக்குமே மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு, படிக்காதவன் படத்தில் வடிவேலு நகைச்சுவை பாத்திரத்தை ஏற்று நடித் துவந்த நிலையில், திடீரென அவர் அப்படத்திலிருந்து வெளியேறினார். ஆனால் அப்போது அதற்கான காரணங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. அதற்குப் பிறகு அப்பாத்திரத்தில் நடிகர் விவேக் நடித்திருந்தார். அப்போது இணையாமல் போன இந்த ஜோடி, இந்தப் படம் மூலம் இணையலாம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.