ரசிகர்களை உற்சாகப்படுத்திய விஜய்யின் புதிய புகைப்படம்

மாஸ்டர் படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகிய பிகில் என்ற திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடியது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையில் அதிக வசூல் அளித்து சாதனை படைத்தது. மேலும் இளைய தளபதி விஜய் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது வெளிவந்த நாளில் இருந்தே யூடியூபில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்தது.

மேலும் அந்த திரைப்படத்திலிருந்து புதிதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் என்னவென்றால் நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் அவரது புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஆண்ட்ரியாவுடன் விஜய் அவரது பக்கத்தில் அமர்ந்துள்ளார். அதுமட்டும்மல்லாமல் அவருக்கு பின்னால் சஞ்சீவியும் அமர்ந்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.