இல்ல... அவர்தான் ராதிகா; தயாரிப்பு தரப்பு கொடுத்த மறுப்பு

சென்னை: இல்லை... இல்லவே இல்லை... பாக்கியலட்சுமி தொடரில் வனிதா விஜயகுமார் தான் இனி ராதிகாவாக நடிக்க போகிறார் என்றும் செய்தி பரவி வருகிறது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸுக்கு பிறகு தற்போது படங்கள், டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா வெளியேறுகிறார் என்றும், அவருக்கு பதில் வனிதா விஜயகுமார் தான் இனி ராதிகாவாக நடிக்க போகிறார் என்றும் செய்தி பரவி வருகிறது.

வனிதா தான் இனி ராதிகாவாக நடிக்க போகிறாரா. காட்டுக்கத்தல் இல்ல கத்துவார் என்று சீரியலை பார்த்து வரும் ரசிகர்கள் அதிர்ச்சி உடன் கேட்டுவந்த நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது.

பரவி வரும் செய்தி துளி கூட உண்மை இல்லை என்றும், ரேஷ்மா தான் தொடர்ந்து ராதிகா ரோலில் நடித்து வருகிறார் என்று தெரிவித்து உள்ளனர்.