முகின் நடிக்கவிருக்கும் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு தமிழ் திரையுலகில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. குறிப்பாக ஹரிஷ் கல்யாண், ஆரவ், ரைசா வில்சன் உள்பட ஒரு சிலர் தமிழ் திரையுலகில் தற்போது பிசியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளரான முகின் ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது முகின் நடிக்கவுள்ள முதல் படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை வெப்பம் படத்தை இயக்கிய இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாகவும் அதில் மேலும் சில முக்கிய தகவல்கள் வெளியாகும் என்றும் குறிப்பிடதக்கது. இந்த படத்தை ஸ்ரீடி புரடொக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்நிறுவனத்தின் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.