அனுமதி வாங்கியாச்சு... சென்னையில்தான் நடக்கிறது; லியோ படத் தயாரிப்பாளர் தகவல்

சென்னை: லியோ இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தான் நடக்கும் எனவும், அதற்கான அனுமதி பெற்றாகிவிட்டது என படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடக்க இருக்கிறது என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்தது.

வெளிநாட்டில் நடக்க இருப்பதாகவும் தகவல் ஆரம்பத்தில் வந்தது. ஆனால் இந்தியாவில் தான் இசை வெளியீட்டு விழா என தயாரிப்பாளர் கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது லியோ இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தான் நடக்கும் எனவும், அதற்கான அனுமதி பெற்றாகிவிட்டது என தயாரிப்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் படத்தின் ரிலீஸில் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலையீடு எதுவும் இல்லை எனவும் அவர் கூறி இருக்கிறார்.