அனிதா சம்பத் நடிக்கும் மாயன் படத்தின் போஸ்டர் வெளியீடு

அனிதா சம்பத் ஹீரோயினாக நடிக்கும் மாயன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் அனிதா சம்பத் போட்டியாளராக உள்ளார்.

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் அனிதா சம்பத். இதன் மூலம் உலக தமிழர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். தொடர்ந்து காப்பான், காலா, 2.0, ஆதித்ய வர்மா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

இதில் அனிதா சம்பத் தான் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாக ரீச் ஆனார். சுரேஷ் சக்கரவர்த்தியை வம்பிழுப்பது, மரியாதை குறைவாக பேசுவது, நக்கலடிப்பது, அவருக்கு எதிராக டீம் சேர்ப்பது என எரிச்சலை கிளப்பி வருகிறார்.

இதனால் சமூக வலைதளங்களில் அதிகம் கழுவி ஊற்றப்பட்டு வருகிறார் அனிதா சம்பத். செய்வதையெல்லாம் செய்துவிட்டு எல்லா தவறும் சுரேஷ் சக்கரவர்த்தி மீதுதான் என்றும் கூறி வருகிறார். கடந்த வாரம் கமல் பேசும் போது கூட சுரேஷ் சக்கரவர்த்தி மீது அபாண்டாமான குற்றச்சாட்டுக்களை கூறினார்.

அப்போது கமல் பேசும் போது, அனிதா கொடுத்த ரியாக்ஷன், தீயாய் பரவியது. சுரேஷ் சக்கரவர்த்தியை கேவலமாக ஒரு பார்வை பார்த்ததோடு வாய்க்குள்ளேயே முணுமுணுத்தார். அந்த வீடியோ பெரும் வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் அனிதா சம்பத்தை விளாசி வருகின்றனர்.

இந்நிலையில் அனிதா சம்பத் ஹீரோயினாக நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. மாயன் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அனிதா சம்பத், ஸ்டன்ட் சில்வா ஆகியோர் லீடிங் ரோலில் நடிக்கின்றனர். சத்யசீலன் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் என கூறப்படும் காட்சிகள் காட்டப்படுவதால் அவற்றை மையப்படுத்தி இந்தப் படம் இருக்கும் என தெரிகிறது. இதில் கையில் தீப்பந்தத்துடன் உள்ளார் அனிதா சம்பத்.