வாரிசு படத்தில் விஜய் வில்லன் பிரகாஷ்ராஜாம்

சென்னை: என்னது இவர்தான் வில்லனா? வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த விழாவில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் வாரிசு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்தார். திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவரும் எனத் தெரிவித்த அவர் நடிகர் விஜய்யின் இன்றைய வளர்ச்சியை ஆச்சர்யத்துடன் பார்ப்பதாகக் குறிப்பிட்டு பேசினார்.

கில்லி, வில்லு திரைப்படங்களுக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்துள்ளதால் வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.