சூரியை கதாநாயகனாக்கி சிவகார்த்திகேயன் படம் தயாரிப்பு

சென்னை: விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ள நிலையில் அடுத்தடுத்து சூரியை கதாநாயகனாக வைத்து படங்கள் உருவாகி வருகின்றன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில் ஒரு படத்தை கூழாங்கல் என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் அந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையோடு தொடங்கியது. இந்த படத்தில் மலையாள நடிகையான அன்னா பெண் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.