சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ள ராகவா லாரன்ஸ்

சென்னை: சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் ராகவா லாரன்ஸ் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸின் அடுத்த படம் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு சமீபத்தில் முடிவடைந்தது. இந்தப் படத்தைத் தவிர மீண்டும் கதிரேசனுடன் ஒரு படம், சந்திரமுகி 2, ரத்னகுமாருடன் ஒரு படம் என பல படங்களில் கமிட்டாகியுள்ளார் லாரன்ஸ்.

இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அயோக்யா படத்தின் இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.