ரஜினி படத்தில் இணைகிறாரா கலை இயக்குனர் டிஆர்கே. கிரண்?

சென்னை; நானும் இருக்கேன்... ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் கலை இயக்குநரும் நடிகருமான டிஆர்கே கிரண் இணைந்துள்ளதை மறைமுகமாக அறிவித்துள்ளார்.


இயக்குநர் நெல்சனின் டாக்டர், பீஸ்ட் படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியவர் டிஆர்கே கிரண். குறிப்பாக பீஸ்ட் படத்தில் டிஆர்கே கிரண் உருவாக்கிய வணிக வளாகத்தின் செட் பாராட்டுக்களைப் பெற்றது.

மேலும் கோ, வலிமை, வேலையில்லாத பட்டதாரி, உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ஜெயிலர் பட போஸ்டரை பகிர்ந்த கிரண், 'என்னுடைய கனவு' என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நெல்சன் படங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் டிஆர்கே கிரண் ஜெயிலர் படத்திலும் இணைவது உறுதியாகியுள்ளது.


ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். பேட்ட, தர்பார் படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக ரஜினிகாந்த் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.