சந்திரபாபு நாயுடுவை ரஜினிகாந்த் சந்திக்கவில்லை

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் 2019 -ம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது ரூபாய் 317 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி அவரை ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர். வேறுகிற செப்.22 வரை 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்த நிலையில் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷுடன் நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசியில் உரையாடி ஆறுதல் கூறியவுடன், சிறையில் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கவும் மனு ஒன்றை அளித்திருந்தார்.

இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை ரஜினிகாந்த் சந்திக்கவில்லை. இதையடுத்து இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “சந்திரபாபு நாயுடுவை சந்திக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் குடும்ப விழா இருந்ததால் நான் செல்லவில்லை” என அவர் கூறினார்.

சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் சொந்த ஊரான கோவை, சூலூரில் அவர்களது குழந்தையின் மொட்டை, காதணி மற்றும் பெயர் சூட்டு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.