பிரபுதேவாவுக்கு இரண்டாம் திருமணமாம்; கோலிவுட்டில் பரபரக்கும் தகவல்

நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவுக்கு இரண்டாம் திருமணம் நடக்க உள்ளது என்று கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் பல இளம் நடிகர்கள் தற்போது அறிமுகமாகி கொண்டே வருகிறார்கள், தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் ஒரு சில நடிகர்களே. இபப்டி முதலில் பாடல்களுக்கு பின்னணி நடன கலைஞனாக இருந்து, பின்னர் படிப்படியாக உதவி நடன இயக்குனராக பணிபுரிந்து திரைபபட நடிகராக அறிமுகமானவர் பிரபுதேவா.

தொடர்ந்து காதலன் , ராசைய்யா, ரோமியோ, மின்சார கனவு, காதலா காதலா, பெண்ணின் மனதை தொட்டு, சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கலையனாக இருக்கும் பிரபு தேவா. ராம் லதா என்பவரை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் வில்லு திரைப்படத்தின் மூலம் நயன்தாரவுக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டவே பொண்டாட்டியை விவாகரத்து செய்துவிட்டு குழந்தைகளுக்காக தான் வாழப்போகிறேன் என அறிவித்திருந்தார், இந்நிலையில் மீண்டும் பிரபு தேவா திருமணம் செய்ய இருப்பதாகவும் தனது சொந்தத்திலே டாக்டராக உள்ள பெண்ணை விரைவில் மணக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.