ஈஸ்வரன் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட சிம்பு!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தின் டைட்டில் 'ஈஸ்வரன் என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜை தினத்தன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் 'ஈஸ்வரன்' படத்தின் பின்னணி இசை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். வெறும் 18 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோ 'இப்ப போட்றா பால? என்று சிம்புவின் குரலுடன் தொடங்குகிறது.

இசையமைப்பாளர் தமனின் இசையில் உருவான பின்னணி இசை சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து இளைஞர்களையும் எழுந்து ஆட வைக்கும் அளவுக்கு செம குத்து பின்னணி இசையாக உள்ளது.

சிம்பு நிதி அகர்வால் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.