இயக்குனர் ஷங்கரின் படத்தில் வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா

சென்னை: இயக்குனர் ஷங்கரின் படத்தில் வில்லன் இவர்... இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' மற்றும் ராம் சரண் நடிக்கும் படங்களை இயக்கி வருகிறார்.

சில வருடங்களாக தடைபட்டிருந்த 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது. 2 படங்களையும் மாறி மாறி இயக்க இருக்கிறார் ஷங்கர். சமீபத்தில் 'இந்தியன் 2' படத்தின் ஒரு ஷெட்யூல் முடிவடைந்தது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு 13-ம் தேதி தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அது முடிந்ததும் ராம் சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க இருக்கிறார் ஷங்கர்.


இதில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். மற்றும் அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது படக்குழு அதை உறுதிப்படுத்தி உள்ளது.