புதிய கார் வாங்கிய சின்னத்திரை நடிகை ரவீனா தாஹா

சென்னை: புதிய கார் வாங்கி உள்ளார் சின்னத்திரையில் ஹீரோயினாக நடித்து வரும் ரவீனா தாஹா.

விஜய் டிவியின் மௌன ராகம் 2 தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ரவீனா தாஹா. அவர் விஜய்யின் ஜில்லா, ராட்சசன் போன்ற படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கும் நிலையில் அதற்கு பிறகு தான் ரவீனா விஜய் டிவி தொடரில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார்.

அந்த சீரியலுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. தற்போது ரவீனா புது கார் வாங்கி இருக்கிறார்.


அவரது அம்மா தான் கார் வாங்கி அவருக்கு கிப்ட் ஆக கொடுத்திருக்கிறாராம். எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரை சுமார் 25 லட்சம் ருபாய் கொடுத்து அவர்கள் வாங்கி இருக்கிறார்கள். இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.