சொத்துக்களை அடமானம் வைத்து உதவிகள் செய்த நடிகர் சோனுசூட்

தனது சொத்துக்களை அடமானம் வைத்து உதவிகள் செய்துள்ளார் நடிகர் சோனுசூட் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான நடிகர்கள் வீட்டில் முடங்கிய நிலையில், வில்லன் நடிகர் சோனு சூட் மட்டும் பலருக்கும் உதவிக்கரம் நீட்டினார். ஊரடங்கினால் பேருந்து இல்லாது தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுகு பஸ் வசதி செய்துகொடுத்தார். ரஷ்யாவில் சிக்கி தவித்த தமிழக மருத்துவ மாணவர்கள் நாடு திரும்ப விமான ஏற்பாடுகள் செய்தார்.

மலைக்கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைனில் படிப்பதற்கு ஏதுவாக செல்போன் டவர் அமைத்துக் கொடுத்தது. என அவரது செயல்கள் மூலம் ரியல் ஹீரோ ஆனார் சோனு சூட். ஒட்டு மொத்த இந்தியாவும் அவரை கொண்டாடியது. ஐ.நாவும் அவரின் செயலை பாராட்டி விருது வழங்கி கெளரவித்தது.

ஆனால் கொரோனா காரணமாக எல்லோருக்கும் ஏற்பட்ட நிதி நெருக்கடி சேனு சூட்விற்கும் வந்துள்ளது. ஆனால், அதனை பொருட்படுத்தாமல் உதவிகள் செய்தார். அதாவது தனது சொத்துக்களை அடமானம் வைத்தும் அவர் உதவிகள் செய்துள்ளார். தனது மனையின் பெயரில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் என வங்கியில் 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கையிலும், பையிலும் பணம் இருந்தாலும் கொடுக்க மனமில்லாத இந்த காலத்தில்,சொத்துக்களை அடமானம் வைத்து பிறருக்கு உதவிபுரிந்ததை பலரும் வாழ்த்தி வருகின்றனர். உண்மைதான் மக்களை காக்கும் ரியல் ஹீரோக்கள் சூப்பர் மேனாக இருப்பதில்லை காமன்மேனாக கடந்து செல்கின்றனர்.