உதயநிதி ஸ்டாலின் கேட்டதற்காக “டான்” படத்தை விட்டுக் கொடுத்த சன் டிவி

சென்னை: யார் சொல்லியும் விட்டுக் கொடுக்காத சன் டிவி நிறுவனம் முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் கேட்டதற்காக விட்டுக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “டான்”. இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த திரைப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வாங்கி வெளியிட்டது. எனவே இந்த திரைப்படத்திற்கான தொலைக்காட்சி உரிமத்தை கலைஞர் டிவி நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது.

ஆனால் முதல் முதலாக இந்த திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி நிறுவனம் தான் வைத்திருக்கலாம். டான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோதே 1 கோடி அட்வான்ஸ் கொடுத்து படத்தை புக் செய்துவிட்டார்களாம்.

பிறகு படமும் பிளாக்பஸ்டர் ஆகிவிட்டது எனவே கலைஞர் தொலைக்காட்சியில் டான் படத்தை ஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டு சன் டிவி நிறுவனத்திடம் பேசியுள்ளாராம். அதற்கு சன் டிவி நிறுவனமும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம்.


இதுவரை வரலாற்றில் யார் சொல்லியும் சன் டிவி நிறுவனம் இப்படி விட்டுக்கொடுத்ததே இல்லயாம். முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் கேட்டதற்காக சன் டிவி விட்டு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.