தெலுங்கு நடிகர் ஷர்வானந்த்திற்கு திருமண நிச்சயதார்த்தம்

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் ஷர்வானந்த்திற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

ஷர்வானந்த் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு வெளியான எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழில் ஜே.கே.யின் நண்பனின் வாழ்க்கை, கனம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானுவில் மக்கள் செல்வனின் கதாபாத்திரத்தில் வேடத்தில் ஷர்வானந்த் நடித்தார்.

ஷர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். ராம் சரண் தனது கர்ப்பிணி மனைவி உபாசனாவுடன் வந்திருந்தார்.

சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் ஜோடியாக வந்தனர். நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதையடுத்து ஷர்வானந்தின் மனைவியாக வரும் ரக்ஷிதா ரெட்டி யார் என்று பலரும் கூகுள் செய்து வருகின்றனர். ரக்ஷிதா அரசியல் தலைவர் போஜ்ஜலா கோபால கிருஷ்ணா ரெட்டியின் பேத்தி ஆவார்.