என் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்சிகா கடைசியாக பார்ட்னர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுத்திருந்த நிலையில், அடுத்ததாக இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். அந்த வகையில், தெலுங்கில் ஸ்ரீனிவாஸ் ஓம்கார் இயக்கத்தில் அவர் நடித்த ‘மை நேம் இஸ் ஸ்ருதி’ படம் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி வெளியானது.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று கொண்டு வருகிறது. இதன் இடையில், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புக்கும், ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கும் நடிகை ஹன்சிகா மனம் திறந்து தனது நன்றியை தெரிவித்து உள்ளார். ஹைதராபாத்தில் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று இருக்கிற


இதையடுத்து அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஹன்சிகா கூறியதாவது ” ‘மை நேம் இஸ் ஸ்ருதி’ படத்திற்கு கிடைத்து வரும் ஆதரவை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருவதை பார்க்கும்போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்துக்காக தயாரிப்பாளரும் இயக்குனரும் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

மேலும் இது ஒரு உண்மையான பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இந்த படத்திற்காக நாங்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் வரவேற்பு மறக்க வைத்துள்ளது. இப்படி ஒரு நல்ல படத்தை எடுத்த இயக்குனருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் அவருடைய இயக்கத்தில் படங்களில் நடிக்க ஆசை படுகிறேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.