நடிகர் புகழ் தன் மகளுக்கு வைத்துள்ள பெயர் ரித்தன்யா

சென்னை: நடிகர் புகழ் தன் மகளுக்கு சூட்டி இருக்கும் பெயர் பற்றி அறிவித்துள்ளார். என்ன பெயர் தெரியுமா?

குக் வித் கோமாளி மூலமாக பிரபலம் ஆனவர் புகழ். தற்போது சினிமாவிலும் அவர் காமெடியனாக கலக்கி வருகிறார். அது மட்டுமின்றி ஹீரோவாக Mr Zoo Keeper என்ற படத்தில் புகழ் நடித்து வருகிறார்.

புகழ் மற்றும் அவரது மனைவி பென்ஸி ஆகியோருக்கு இரண்டு வாரத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அதை புகழ் மகிழ்ச்சியாக அறிவிக்க, அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.

தற்போது புகழ் அவரது மகளுக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தி இருக்கிறார். ரித்தன்யா என அவர் மகளுக்கு பெயர் சூட்டி இருக்கிறார்.

கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை..., இருந்தாலும், எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே, இன்று முதல் நீ, ரித்தன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய் அன்பு மகளே.