எந்திரன் படம் அப்போதே வசூல் செய்த தொகை ரூ.370 கோடியாம்

சென்னை: அப்போவே அவ்வளவு வசூலா என்று ரசிகர்கள் வியப்படைந்து போய் உள்ளனர். எதற்காக தெரியுங்களா?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் 2010ல் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் ஆன படம். தமிழ் சினிமாவை மற்ற சினிமா துறையினர் ஆச்சர்யத்துடன் பார்க்க செய்த படம் இது என்றும் சொல்லலாம்.

ரஜினி கேரியரை மிகப்பெரிய உச்சத்திற்கு எந்திரன் படம் கொண்டு சென்றது என்றும் சொல்லலாம். எந்திரன் படத்தின் மொத்த வசூல் 370 கோடி ருபாய் என சன் டிவி COO அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அப்போவே அவ்வளவு வசூலா என்று ரசிகர்கள் இப்போதும் வியப்படைகின்றனர்.

அதன் மூலமாக மிகப்பெரிய லாபத்தை சன் டிவி பெற்றதாகவும் அவர் கூறி இருக்கிறார்.