நடிகர் ஷாரூக்கானில் பதான் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

சென்னை: நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ‘பதான்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. மேலும் தமிழிலும் வெளியவதால் ரசிகர்கள் வெகு எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்குகிறார். இப்படம் யாஷ் ராஜ் தயாரிப்பின் 50வது படமென்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 25இல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகுமென்பது குறிப்பிடத்தக்கது.

அட்லி இவரை வைத்து எடுக்கும் ஜவான் படமும் இந்தி மற்றும் தமிழில் வெளியாவதால் இப்படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.