கிரிமினல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல்

சென்னை: ‘கிரிமினல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அறிமுக இயக்குனர் தட்சிணாமூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கியுள்ள படம் ‘கிரிமினல்’. இப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையை மையமாக வைத்து க்ரைம் த்ரில்லர் படமான இப்படம் பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘கிரிமினல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் நடித்துள்ள போஸ்டரில் டீசர் மற்றும் ஆடியோ விரைவில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த போஸ்டரை நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.