ஆர்யா நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது!

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் 'சல்பேட்டா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் வடசென்னை பகுதியில் உள்ள குத்துச்சண்டை வீரரின் கதையம்சம் கொண்டதாக உள்ளது.

இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடித்து வருகிறார். குத்துச்சண்டை கேரக்டருக்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்து உண்மையான குத்துச்சண்டை வீரர் போல் தனது உடலை மாற்றி உள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தின் நாயகியாக துஷாரா என்ற நடிகை நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளியான 'போதை ஏறி புத்தி மாறி' என்ற தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

ஆர்யாவின் 30வது படமான இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் கலையரசன் நடித்து வருகின்றனர் என்பதும் முரளி ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.