அஜித்தின் துணிவு படத்தின் அடுத்த பாடல் 25ம் தேதி ரிலீஸ்

சென்னை: அஜித்தின் துணிவு படத்தில் இருந்து கேங்க்ஸ்டா பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாகும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மைக் கதையில் அஜித் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் ‘சில்லா சில்லா’ மற்றும் ‘காசேதான் ’ பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்தன.

இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘துணிவு’ படத்தின் மூன்றாவது பாடல் ‘கேங்க்ஸ்டா’ என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடலுக்கான வரிகளும் வெளியாகியுள்ளன.

மேலும், ‘கேங்க்ஸ்டா’ பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அப்டேட் மூலம், ரசிகர்கள் அடுத்த குத்தாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.