அயலான் படத்தில் ஏலியனாக நடித்தவர் புகைப்படம் வைரலாகிறது

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் ஏலியனாக நடித்தது நடிகர் வெங்கட் செங்குட்டுவன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிட்டதட்ட 6 ஆண்டுகளாக உருவாகி வரும் திரைப்படம் தான் அயலான். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பல பிரச்சனைகளுக்கு பின் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து யோகி பாபு, ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசைமைத்துள்ளார்

படத்தின் மையக்கரு ஏலியன் என்பதால் அதை மெனக்கெட்டு VFXல் பிரமாண்டமாக உருவாக்கியுள்ளனர். அந்த பிரமாண்டத்தை சமீபத்தில் வெளிவந்த அயலான் டீசரில் தெரிந்தது.
என்னதான் VFXல் ஏலியனை பிரமாண்டமாக காட்டியிருந்தாலும், VFXக்கு உதவும் வகையில் நடித்த நடிகர் யாரென்று இதுவரை பலருக்கும் தெரியவில்லை. அவருடைய பெயர் வெங்கட் செங்குட்டுவன். இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.