கலவையான விமர்சனங்கள் குழப்பம் அடைந்துள்ளேன் என்று பிரபல நடிகர் தகவல்

மும்பை: தமிழில் வெளியான படம் விக்ரம் வேதா. வழக்கமான போலீஸ்-தாதா கதையாக இருந்தாலும், அதில் கொஞ்சம் நஞ்சையும் வன்மத்தையும் தூவி த்ரில்லர் வடிவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் மக்களிடமிருந்து பலத்த ஆதரவைப் பெற்றது.

விக்ரம் வேதா. கற்பனைக் கதையில் விக்ரமாதித்தனின் தோள் மீது ஏறிக்கொண்டு வேதாளம் கேட்பது போல, “ஒரு கத சொல்லட்டுமா சார்…?” என மாதவனிடம் விஜய் சேதுபதி கேட்பது மீம்ஸ்களிலும், வீடியோ வடிவிலும் வைரலானது.


தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்வது சமீப காலத்தில் வழக்கமாக மாறியுள்ளது. விக்ரம் வேதா படத்தையும் விட்டுவைக்கவில்லை. இப்படத்தில், சயிஃப் அலி கான் ஹீரோவாகவும், ஹிரித்திக் ரோஷன் வில்லனாகவும் நடித்திருந்தனர்.

படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பாலிவுட்டில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம், கதையை கொஞ்சமும் பிழற்றாது, அப்படியே தமிழ் விக்ரம் வேதாவின் நகலாக உள்ளதாக சிலர் நெகட்டிவ் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இவ்வாறாக ரசிகர்கள் தெரிவித்து வரும் கலவை விமர்சனங்கள் குறித்து ஹிரித்திக் ரோஷன் ஒரு கருத்தை கூறியுள்ளார்.


“விக்ரம் வேதா படத்திற்கு வந்திருக்கும் கலவை விமர்சனங்கள் மிகவும் குழப்பத்தைத் தருகிறது” என கூறியுள்ளார். மேலும், பல வகையான விமர்சனங்கள் இருப்பினும், விக்ரம் வேதா படத்தில் நடித்தது தனக்கு நல்ல அனுபவமாக இருந்ததாகவும், தெரிவித்துள்ளார்.