சூர்யாவின் ‘கங்குவா’ க்ளிம்ப்ஸ் வீடியோவை இந்த தேதி வெளியிட இருப்பதாக படக்குழு தகவல்

‘கங்குவா’ க்ளிம்ப்ஸ் வீடியோவை வருகிற 23-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவிப்பு .. சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும்

இதையடுத்து இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார். இதையடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது கொடைக்கானல் பகுதியில் அடர்ந்த காட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. வரலாற்றுக் காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு நடக்கிறது.

இந்நிலையில், ‘கங்குவா’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வரும் 23-ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியிட இருப்பதாக ஸ்டுடியோ கிரின் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது. இதனை அடுத்து இதற்காக போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கை முழுக்க தழும்புகளுடன் போர்வாளை பிடித்தபடி ஒரு கதாபாத்திரம் இடம்பெற்று உள்ளது.