நடிகர் சதீஷ் நடித்துள்ள வித்தைக்காரன் படத்தின் டீசர் வெளியானது

சென்னை: நடிகர் சதீஷ் நடித்துள்ள வித்தைக்காரன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரை நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதீஷ் நடித்துள்ள படம் ‘வித்தைக்காரன்’. இதில் சிம்ரன் குப்தா நாயகியாக நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அருள் நிதியின் தேஜாவு படத்தை தயாரித்த ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டே இப்படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரை நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.