சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் டிரைலர் வெளியாகி செம வைரல்

சென்னை: டிரைலர் வெளியாகி வைரல்... சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் - அதீதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து

பின்னணி வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. மாவீரன் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வந்த நிலையில், படக்குழு படத்தின் வெளியீட்டு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தின் டிரைலரை நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். இதையடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக, 'சீனா சீனா' பாடல் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.