ஆந்தாலஜி திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகிறது!

அமேசான் பிரைம் ஓடிடிக்காக தயாரான ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள ஐந்து பாகங்களை கார்த்திக் சுப்பராஜ், கௌதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் சுகாசினி மணிரத்தினம் ஆகியோர் இயக்கி உள்ளனர்.

மேலும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்திற்கு 'பாவ கதைகள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து இயக்குனர்களின் தனித்தனி பாகத்திற்கு தனித்தனி டைட்டில்கள் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி சுதா கொங்காராவின் பகுதிக்கு 'இளமை இதோ' என்ற டைட்டிலும் இதில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் கல்யாணி பிரியதர்ஷினியும் நடிக்கின்றனர். கெளதம் மேனன் பகுதிக்கு 'அவரும் நானும் அவளும் நானும்' என்ற டைட்டிலும் இதில் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ரிதுவர்மா நடிக்கின்றனர்.

மேலும் சுஹாசினி இயக்கும் பகுதிக்கு 'காஃபி எனிஒன்' என்ற டைட்டிலும் இதில் ஸ்ருதிஹாசன், அனுஹாசனும் நடிக்கின்றனர். ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் பகுதிக்கு 'ரீயூனியன்' என்ற டைட்டிலும் இதில் ஆண்ட்ரியா மற்றும் லீலா சாம்சன் நடிக்கின்றனர். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பகுதிக்கு 'மிராக்கிள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் பாபிசிம்ஹா, முத்துகுமார் நடிக்கின்றனர்.

இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டிரைலரை மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து வெளியிடவிருப்பதாக இயக்குனர் ராஜீவ் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.