திரைத்துறையில் வெற்றி தோல்வி இரண்டுமே இருக்கின்றன.. பூஜா ஹெக்டே கூறியது..

சினிமா உலகின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு நடிகை டிரெண்டிங்காக இருப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது டிரெண்டிங்காக இருப்பவர் பூஜா ஹெக்டே. தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.

இதுகுறித்துப் பேசிய அவர் இவ்வாறு கூறினார். எனது ஆறு படங்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனது சினிமா வாழ்வின் சிறந்த காலக்கட்டமாக இது கருதப்படலாம்.

ஆனால், என் ஆரம்பகால சினிமா வாழ்வு தோல்வியிலிருந்துதான் தொடங்கியது. என் ஆரம்பகால படங்கள் சரியாக ஓடவில்லை. அதனால் எனக்கு வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

நான் எதிர்பார்த்த கதாபாத்திரங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. பின்னர் தெலுங்கில் நான் நடித்த படம் ஒன்று நன்றாக ஓடியபோதுதான் மகிழ்ச்சியாக இருந்தது.அதேசமயம் திரைத்துறையில் வெற்றி தோல்வி இரண்டுமே இருக்கின்றன. சில படஙங்கள் வெற்றி பெறலாம். சில தோல்வியடைலாம் என்று கூறினார்.