தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாக வாய்ப்பே இல்லை; படக்குழு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

தற்போது மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துவிட்டதை அடுத்து அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிலும் ரஜினிகாந்த் இல்லாத காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டது.

இந்த நிலையில் தீபாவளிக்கு இந்த படம் வெளியாக வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது. அதேபோல் பொங்கல் திருநாளிலும் இந்த படம் வெளியாகாது என்றும் ஏப்ரல் 14ஆம் தேதி வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் தான் இந்த படம் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் 'அண்ணாத்த' படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இது ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட ஃபேமிலி சென்டிமென்ட் படம் என்பது குறிப்பிடத்தக்கது