’விஜய் 68’-ல் இவர்கள் தான் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றர்களாம்

‘லியோ’ படத்தை முடித்துவிட்ட நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதில் விஜய் 2 வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

இதையடுத்து அதில் ஒரு வேடத்தை மிகவும் இளமையாக காண்பிக்கவுள்ளனர். எனவே இதற்காக படக்குழு அமெரிக்கா சென்றது. ‘3டி விஎஃப்எக்ஸ்’ என்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்யை இளமையாக காண்பிக்க இருக்கின்றனர்.

இதில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, பிரியங்கா மோகன் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது பிரியங்கா மோகனுக்கு பதிலாக மீனாட்சி சவுத்ரி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர், விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் நாயகியாக நடித்தவர்.

மேலும் இப்படத்தில் மைக் மோகன், பிரசாந்த், லைலா, ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். இதன் தொடக்க விழா சென்னை பிரசாத் லேப்பில் நேற்று காலை நடந்தது. படப்பிடிப்பு சென்னையில் இன்று முதல் தொடங்குகிறது.